×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோட்டத்தில் குதிரை மேய்ந்த விவகாரத்தில் கொடூர கொலை.. கொடைக்கானலில் பதற்றம்.! 

இளைஞர் கொலை செய்யப்பட்ட காரணத்தால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில், பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

குதிரை மேய்ந்த தகராறு: 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை கிராமத்தில் வசித்து வருபவர் ராமர் (வயது 26). இதே பகுதியில் வசித்து வரும் அதிமுக எம்.ஜி.ஆர். ஒன்றிய செயலாளர் ஜெயபால் மகன் ரகு (வயது 23). ராமர் குதிரை ஒன்றை வளர்த்து வந்த நிலையில், அது ரகுவின் தோட்டத்தில் மேய்ந்து இருக்கிறது. 

இதையும் படிங்க: "என் பொண்டாட்டிய உன் மகன் கூட்டிட்டு போறான்" மகனின் கள்ளக்காதலால் தந்தை பலி.. கோவையில் ரணகொடூரம்..!

பிரச்சனை: 

இந்த விஷயம் குறித்து இருவருக்கும் இடையே கருத்து முரண் நிலவி வந்துள்ளது. மேலும், முன்விரோதமும் இருந்துள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் ராமர், 18 வயது இளைஞர் ரகுவின் வீட்டருகே நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அச்சமயம், அங்கு வந்த ரகு குதிரை தோட்டத்தில் மேய்கிறது எனக்கூறி ராமரை அழைத்துச் சென்றுள்ளார். 

கொலை: 

வழியிலேயே ரகு தான் மறைத்து வைத்திருந்த வாளால் ராமரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இதனைக்கண்டு தடுக்க முயன்ற வாலிபரையும் வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயத்துடன் துடித்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, ராமர் பலியானது உறுதி செய்யப்பட்டது. 

கொலை குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை நடத்தி, ரகுவை கைது செய்தனர். கொலை சம்பவத்தால் ஆத்திரமடைந்த ராமரின் உறவினர்கள், ரகுவின் வீட்டை அடித்து நொறுக்கினர். பதற்றம் காரணமாக காவல் துறையினர் 100 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: மதுபோதை தகராறால் துள்ளத்துடிக்க பலியான இளைஞர்.. நண்பர்கள் அரங்கேற்றிய வெறிச்செயலால் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #kodaikanal #Murder #குதிரை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story