×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் பொண்டாட்டிய உன் மகன் கூட்டிட்டு போறான்" மகனின் கள்ளக்காதலால் தந்தை பலி.. கோவையில் ரணகொடூரம்..!

Coimbatore News: மகனின் முறைதவறிய பழக்கத்தால் தந்தை கொலை செய்யப்பட்டார்.

Advertisement

மகனின் செயலுக்கு தந்தை பலியான சோகம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கோட்டூர் பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 56). இதே பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 26). இவர்கள் இருவரும் தொழிலாளர்கள் ஆவார்கள். 

கள்ளக்காதல்:

பாலகிருஷ்ணனின் மகன் ஓராண்டுக்கு முன்னதாக ஆனந்தின் மனைவியுடன் முறைதவறிய உறவை ஏற்படுத்தி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும், வெளியூருக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

இந்த விஷயம் குறித்து ஆனந்த் - பாலகிருஷ்ணன் இடையே தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் வந்த ஆனந்தன், உயினது மனைவியை உன் மகன் உன்னால் தான் அழைத்துச் சென்றுள்ளார் என தகராறு செய்துள்ளார். 

பரிதாபமாக பறிபோன உயிர்:

அப்போது, ஆத்திரமடைந்த ஆனந்தன் பாலகிருஷ்ணனை தாக்கி கீழே தள்ளியதில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின் மூத்த மகள் வீட்டுக்கு சென்று தன்னை ஆனந்த் அடித்துவிட்டு காரணத்தால் உடல் சோர்வுடன் இருக்கிறது என கூறியுள்ளார்.

அவர் ஆட்டோவில் தந்தையை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆனந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Coimbatore #Affair #கள்ளக்காதல் கொலை #பொள்ளாச்சி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story