"செல்போனில் தோண்ட தோண்ட ஆபாச படங்கள்..." வசமாக சிக்கிய டிரான்ஸ்போர்ட் சூப்பர்வைசர்.!!
செல்போனில் தோண்ட தோண்ட ஆபாச படங்கள்... வசமாக சிக்கிய டிரான்ஸ்போர்ட் சூப்பர்வைசர்.!!
கோவை மாவட்டம், சூலூர் பாப்பம்பட்டி அருகே காம்பவுண்ட் ஒன்றில் 5 வீடுகள் அடுத்தடுத்து வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இதில் குடும்பத்தினர் மற்றும் பேச்சலர் தங்கி இருந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதிதாக சேலம் மாவட்டம் சின்ன சீரகப்பட்டியை சார்ந்த ராஜேஷ் கண்ணா என்ற 20 வயது இளைஞர் இந்த குடியிருப்பில் ரூம் மேட்டாக தங்கினார். இவர் தனியார் ட்ரான்ஸ்போர்ட்டில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை அந்த குடியிருப்பு பக்கத்தில் வசிக்கும் பள்ளி மாணவி குளிப்பதற்காக பாத்ரூம் சென்றிருக்கிறார். இதை கண்ட ராஜேஷ் கண்ணா பக்கத்து பாத்ரூமில் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தனது செல்போன் மூலம் குளித்துக் கொண்டிருந்த மாணவியை படம் பிடிக்க முயன்றுள்ளார். இதை எதார்த்தமாக பார்த்த மாணவி அதிர்ச்சியில் வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். அப்போது யாருக்கும் தெரியாமல் ராஜேஷ் கண்ணா தப்பித்துள்ளார்.
மகளின் இந்த கோலத்தை கண்டு அதிர்ந்த தாய் அவளிடம் விசாரித்த போது அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஷ் கண்ணாவை அழைத்து விசாரித்தனர். ஆரம்பத்தில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று சமாளித்துள்ளார். பின்னர் போலீசார் அவரது செல்போனை வாங்கி பரிசோதனை செய்ததில் பல்வேறு பாஸ்வேர்டுகள் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அத்தனை பாஸ்வேர்டுகளையும் ராஜேஷ் கண்ணாவிடம் கேட்டு ஓபன் செய்து பார்த்ததும் அதில் 300-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருந்துள்ளது.
இதையும் படிங்க: அட கொடுமையே... "13 வயது சிறுமி மீது கற்பழிப்பு முயற்சி..." 21 வயது இளைஞர் கைது.!!
மேலும் புகாரளித்த பெண்ணின் வீடியோவை அவர் டெலிட் செய்ததை கண்டுபிடித்த போலீசார் இத்தனை ஆபாச வீடியோக்களையும் பார்த்து அதிர்ந்து போயினர். இதைனையடுத்து ராஜேஷ் கண்ணா மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது, மேற்கொண்டு விசாரணையில் தெரியவரும் என போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: "பாப்பா ட்ரெஸ்ஸ கழட்டி அங்கிள் ஏதோ செய்றாரு..." 8 வயது சிறுமி பலாத்காரம்.!! 44 வயது நபர் கைது.!!