அட கொடுமையே... "13 வயது சிறுமி மீது கற்பழிப்பு முயற்சி..." 21 வயது இளைஞர் கைது.!!
அட கொடுமையே... 13 வயது சிறுமி மீது கற்பழிப்பு முயற்சி... 21 வயது இளைஞர் கைது.!!
தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை கைது செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
சிறுமி மீது பலாத்காரம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த 21 வயது இளைஞர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிறுமியின் வீட்டிற்கு ஓடி வரவே பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
காவல்துறையில் புகார்
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிறுமியின் பாட்டி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மகேஷ் குமார்(21) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட மகேஷ்குமார் கோனார்கோட்டை புதூர் கிழக்குத் தெரு காலனியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் என தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: "பொது இடங்களிலும் பாதுகாப்பில்லையா..." இரயில் நிலையத்தில் பாலியல் சேட்டை.!! 30 வயது நபர் கைது.!!
போக்சோ வழக்கு
இதனையடுத்து அந்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளியை சிறையிலடைத்தனர். 13 வயது சிறுமி மீது நிகழ்த்தபட்ட பலாத்காரம் முயற்சி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: விடுமுறையில் வழிபறி... "பாட்டியிடம் கைவரிசை காட்டிய ராணுவ வீரர்..." மடக்கி பிடித்த மக்கள்.!!