பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞர்கள் கைது!
பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞர்கள் கைது!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 14 வயது பள்ளி மாணவனை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவனுடன், அதே பகுதியைச் சேர்ந்த லியோ (20), நவீன் (30) ஆகிய இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த பள்ளி விடுமுறை நாட்களில் விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுவனை அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இருவரும், அங்கு சிறுவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் விசாரித்தபோது தனக்கு நேர்ந்த சம்பவத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 7 மாத கர்ப்பிணி காதலி அடித்துக்கொலை.. நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.! சேலத்தில் திக்., திக் சம்பவம்.!
இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் லியோ மற்றும் நவீன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனிடையே, நவீன் ஏற்கனவே இதுபோன்ற பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும், அப்போது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தற்போதைய சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமண தகராறில் விபரீதம்.. 7 மாத கர்ப்பிணி கொலை; கிணற்றில் சடலம் மீட்பு!