×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

7 மாத கர்ப்பிணி காதலி அடித்துக்கொலை.. நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.! சேலத்தில் திக்., திக் சம்பவம்.! 

Salem News: இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

 

காதலன் திருமணம் செய்துகொள்வான் என்ற நம்பிக்கையில் தனிமையில் நெருங்கி 7 மாத கர்ப்பிணியான 23 வயது இளம்பெண், காதலனால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

வயிற்று வலி: 

சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி, கொங்கணாபுரம், கோணசமுத்திரம், கருங்குள்ளன் பகுதியில் வசித்து வருபவர் பேராகவுண்டர். இவரின் மகள் கோகிலா (வயது 23). கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி இவரின் மகள் கோகிலா திடீர் வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டார். இதனால் பதறிப்போன பெற்றோர் மகளை மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, கோகிலா 7 மாத கர்ப்பம் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் துண்டு துண்டாக மிதந்த பெண்ணின் சடலம்... சேலத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 

புகார்: 

இதனால் அதிர்ந்துபோன கோகிலாவின் பெற்றோர், ஆகஸ்ட் 21ம் தேதி சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் கோகிலாவிடம் விசாரணை நடத்தியபோது, அங்குள்ள கன்னியாம்பட்டி பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி அம்மாசி (வயது 26) என்பவரை கோகிலா காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக கூறி அம்மாசி பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்தது தெரியவந்தது. 

கர்ப்பம்: 

இதனால் கோகிலா கர்ப்பமானதும் தெரியவந்தது. இதனையடுத்து, அம்மாசியை அழைத்து விசாரித்தபோது காதல் தனிமை உறுதி செய்யப்படவே, காவல் நிலையத்தில் கோகிலாவை திருமணம் செய்வதாகவும் எழுதிக்கொடுத்துவிட்டு அவர் சென்றுள்ளார். பின் இருவரும் ஒன்றாக குடித்தனமும் நடத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களில் ஆகஸ்ட் 26ம் தேதி கோகிலா திடீரென மாயமானதாக அம்மாசி கோகிலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  

விசாரணை: 

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கெங்கணாபுரம் காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று அங்குள்ள வெள்ளாளபுரம், பாச்சாலியூர் பகுதியில் இருக்கும் குப்புசாமியின் விவசாய கிணற்றில், வெள்ளைநிற சாக்குப்பை கட்டப்பட்ட நிலையில் மிதந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு அதிகாரிகள் உதவியுடன் சாக்குமூட்டையை மீட்டபோது, அதில் கோகிலாவின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. 

கைது: 

இதனையடுத்து, அம்மாசியை பிடித்து விசாரணை செய்தபோது, கர்ப்பிணி காதலியை அடித்துக்கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: இன்ஸ்டா பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்று போக்ஸோவில் சிக்கிய 19 வயது காதலன்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #Murder #Love #pregnant woman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story