வீட்டில் புகுந்து பெண் கொடூர கொலை.. நகைகள் மாயம்.. திருவள்ளூரில் பேரதிர்ச்சி சம்பவம்..!
Thiruvallur News: நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.
பொன்னேரியில் நடந்த கொலை சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மளிகைக்கடை தம்பதி:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவர், சொந்தமாக மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். ராதாகிருஷ்ணனின் மனைவி வனஜா (வயது 55). இவர் இட்லி மாவு விற்பனை செய்து வருகிறார். தம்பதிகளுக்கு மகன், 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: காதலியை பார்த்துவிட்டு வரும்வழியில் இளைஞருக்கு நடத்த கோர மரணம்.. சென்னையில் ஷாக்.!
கொலை சம்பவம்:
இதனிடையே, ராதாகிருஷ்ணன் மளிகைக்கடையில் வழக்கம்போல வியாபாரம் செய்து வந்த நிலையில், வனஜா கணவருக்கு டீ கொடுத்துவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். பின் மதியம் சாப்பிட ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்ற நிலையில், வனஜாவை பார்த்தபோது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். இதனைக்கண்டு அலறி சத்தமிடவே, திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விசாரணை:
இதன்பேரில் நேரில் வந்த அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் வனஜாவை சோதித்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. பின் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், இட்லி மாவு வாங்க வந்த மர்ம நபர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் வனஜா அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்ததும் உறுதியானது. இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் இப்படியா? வாழ்நாளை நரகமாக்கிய கணவனை எமலோகத்துக்கு அனுப்பிய மனைவி..!