×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சேலை வாங்கித்தரல.. நீயெல்லாம் உயிரோட இருக்கணுமா? கணவரின் மூச்சை நிறுத்திய மனைவி.. கணவர்களே உஷார்.! 

சேலை வாங்கித்தராததால் கணவரை மனைவி கொலை செய்தார். 

Advertisement

மாற்றுத்திறனாளி கணவரை சேலைக்காக மனைவி கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. 

மாற்றுத்திறன் கணவர்: 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், பத்லாபூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிராம் சிங் (வயது 35). இவரின் மனைவி சுனிதா (வயது 30). ஹரிராம் சிங் மாற்றுத்திறன் நபர் ஆவார். இதனிடையே, கடந்த ஜூலை 19 ம் தேதி கணவருக்கு உடல்நலம் குன்றியதாக உறவினர்களுக்கு சுனிதா தகவல் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கர்ப்பிணியின் பெண்ணுறுப்பில் 27 செமீ இரும்பு ராடு.. சைக்கோ கணவனால் ராட்சசன் பட பாணியில் நரகவேதனை.. பறிபோன 2 உயிர்.!

மருத்துவமனையில் அனுமதி: 

இதனையடுத்து, நேரில் வந்த உறவினர்கள் ஹரிராமை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஹரிராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வந்தது. 

ஷாக் தகவல்: 

பிரேத பரிசோதனை முடிவில் ஹரிராம் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, சுனிதாவிடம் விசாரணை நடந்தது. அப்போது, சம்பவத்தன்று தனக்கு சேலை வாங்கித் தருவதாக கணவர் கூறியதாகவும், பின் சேலை வாங்காமல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்ததில் உயிரிழந்துவிட்டதாகவும் உண்மையை தெரிவித்துள்ளார். 

குக்கர் மூடியால் முதலில் கணவரை தலையில் தாக்கிய நிலையில், அவர் நிலைகுலைந்து மயங்கியதும் அவரின் மீது ஏறி அமர்ந்து கழுத்தை நெரித்து கொலை சம்பவம் நடந்துள்ளது. விசாரணைக்குப்பின் சுனிதா கைது செய்யப்பட்டார்.  

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Husband Wife #Murder #Saree Dispute
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story