சட்டையை பிடித்து இழுத்து..... டீச்சர் அடிக்காதீங்க! பயத்தில் அழுது இருமி.... ஆசிரியர் மீது அப்படியே சரிந்த 6 வயது சிறுவன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி... பதறவைக்கும் காட்சி!!!
விசாகப்பட்டினம் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாத எல்கேஜி மாணவரை ஆசிரியர் அடித்ததாக கூறப்படும் நிலையில், மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டுப்பாடம் செய்யாததாக கூறி எல்கேஜி மாணவர் பிரணய் தேஜை (6) ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுவன் அழுதுகொண்டே இருமியபடி ஆசிரியர் மீது மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர் மீது மயங்கி விழுந்த சிறுவன்
பிரணய் தேஜ் வகுப்பறையில் இருந்தபோது வீட்டுப்பாடம் செய்யவில்லை என ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுவன் பயந்து அழுததுடன், இருமியபடி இருந்துள்ளார். திடீரென நிலை தடுமாறி ஆசிரியர் மீது மயங்கி விழுந்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அவசரப்பட்டுடோமோ... ஆலோசனையே இல்லாமல் இப்படி ஒரு முடிவு! கசிந்த சீக்ரெட்.... பரபரப்பில் அரசியல் களம்!!!
மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதி
குழந்தை மயக்கமடைந்ததை தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரணய் தேஜ் உயிரிழப்பு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளால் கொந்தளித்த பெற்றோர்
இதற்கிடையில் பள்ளியில் பதிவான சிசிடிவி காட்சிகளை பிரணய் தேஜின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பார்த்ததாக கூறப்படுகிறது. காட்சிகளை பார்த்த அவர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். இதையடுத்து பள்ளி வாசல் முன்பு திரண்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாகப்பட்டினம் பள்ளி சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதுமை தந்த வலி.. பாரமாக நினைத்த மகன்.. ஓடும் ரயில் முன் தள்ளி... திடுக்கிடவைக்கும் சம்பவம்.!