×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஸ்னாக்ஸ் பிரியர்களுக்கு ஷாக்.. பேக்கரி கொடுத்த சமோசா பூரான்..!

Viluppuram News: ஆசையாக சமோசா வாங்கிய நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Advertisement

 

சமோசா வாங்கிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சமோசா:

நொறுக்குத்தீனி பிரியர்கள் டீக்கடைக்கு சென்றால் முதலில் எதிர்பார்ப்பது சமோசா தான் என்று கூறும் அளவு, காலை / மாலை நேரத்தில் மிகமுக்கிய இடத்தை பெற்றுள்ளது. பலருக்கும் பிடித்த சமோசா இன்றளவில் ரோட்டுக்கடை முதல் பேக்கரி வரை பிரதானமாக விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை திட்டமிட்டு சீரழித்த காம பேராசியர்கள்.. வீடியோ எடுத்து நடந்த கொடுமை.!

தனியார் பேக்கரி:

இதனிடையே, விழுப்புரத்தில் சமோசா வாங்கிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே, தனியாருக்கு சொந்தமான பேக்கரி செயல்பட்டு வருகிறது. 

சமோசாவில் பூரான்:

இந்த பேக்கரில் ராஜசேகர் என்பவர் சம்பவத்தன்று சமோசா வாங்கி இருக்கிறார். அப்போது, சமோசாவில் பூரான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜசேகர், கடை உரிமையாளரிடம் சென்று புகார் அளித்துள்ளார். 

உணவு பாதுகாப்புத்துறை விசாரணை:

ஆனால் உரிய பதில் கிடைக்காத நிலையில், உணவில் பூரான் கிடந்ததை வீடியோ எடுத்து ஆதாரத்துடன் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமோசா உட்பட எந்த உணவாக இருந்தாலும், கடையில் வாங்கி சாப்பிடும்போது கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம்.

இதையும் படிங்க: Salem News: திமுக பிரமுகரின் அதிர்ச்சி செயல்.. லீக்கான வீடியோ.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Villupuram #விழுப்புரம் #சமோசா #Samosa #பூரான்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story