×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Salem News: திமுக பிரமுகரின் அதிர்ச்சி செயல்.. லீக்கான வீடியோ.! 

சேலம் கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் இப்ராஹிம், ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Advertisement

திருமண மண்டபத்தின் பொறுப்பு பிரச்சனையில், திமுக பிரமுகர் ஒருவர் திருமண மண்டப செயலாளரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் தோக்ஸ்சால் இஸ்லாமிய திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவகத்தில் கோட்டை திமுக செயலாளர் இப்ராஹிம், நேற்று (ஜன.05) தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது வாட்சப் செயலியில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தாக்குதல் சம்பவம்:

இந்த திருமண மண்டபத்தின் செயலாளராக நௌமான் என்பவர் இருந்த வருகிறார். இவருக்கும், திமுக செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருதரப்பும் முன்விரோதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மண்டபத்துக்கு சென்ற இப்ராஹிம் நௌமானை தாக்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: "சிரிப்பா சிரிக்குது நிலைமை... " அரை நிர்வாண கோலத்தில் ஆபாச பேச்சு.!! போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்த காவல்துறை.!!

காவல்துறை விசாரணை:

இந்த விஷயம் குறித்து சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், நௌமானை திருமண மண்டபத்தின் பொறுப்பில் இருந்து விடுவிக்க இப்ராஹிம் அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று மோதல் சம்பவம் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: கட்டுமான வேலையில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. 2வது மாடியில் காத்திருந்த எமன்.. தந்தை கண்முன் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #politics #Salem DMK #சேலம் திமுக #அரசியல் #குற்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story