"சிரிப்பா சிரிக்குது நிலைமை... " அரை நிர்வாண கோலத்தில் ஆபாச பேச்சு.!! போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்த காவல்துறை.!!
சிரிப்பா சிரிக்குது நிலைமை... அரை நிர்வாண கோலத்தில் ஆபாச பேச்சு.!! போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்த காவல்துறை.!!
காவலர் குடியிருப்பில் குடிபோதையிலிருந்த யுவராஜ் என்ற காவலர் அரை நிர்வாணமாக நின்று கொண்டு பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையிலுள்ள கரியலூர் என்ற காவல் நிலையத்தில் யுவராஜ் (32) என்பவர் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கரியலூர் காவலர் குடியிருப்பில் தங்கி தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது. இந்நிலையில் காவலர் குடியிருப்பில் அத்துமீறி நடந்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதையின் உச்சியிலிருந்த யுவராஜ் குடியிருப்பில் அரை நிர்வாணமாக நின்று கொண்டு பெண்களிடம் ஆபாச செயல்களை செய்துள்ளார். அங்கே செல்லும் பள்ளி மாணவிகள் பெண்களைப் பார்த்து ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இதனை பார்த்த பெண்கள் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். இதனை கண்ட சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் நடந்து சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்.. பொதுமக்கள் உதவி.!
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துள்ளது. மேலும் ஒரு திருமணமான பெண் தான் விரும்பினால் திருமணமாகாத ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இதனையறிந்த காவல்துறை யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. காவலரே இத்தகைய அருவருக்கத்தக்க செயலை செய்தது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற பெண்.. லீக்கான காட்சிகள்.!!