×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆம்பளையா நீ? அந்த நேரத்தில் மனைவி கேட்ட கேள்வி.. கோவத்தில் விபரீதம் செய்த கணவன்.. வீசிய துர்நாற்றம்.!

Vellore News: காதல் திருமணம் செய்த தம்பதிகள் இறுதியில் எதிர்கொண்ட பிரச்சனை 3 குழந்தைகளை நடுதெருவில் நிறுத்தி இருக்கிறது.

Advertisement

நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா, ஆம்பளையா நீ? என மனைவி கேட்ட கேள்வியால் கணவர் செய்த விபரீத முடிவு 3 குழந்தைகளை தவிக்க வைத்துள்ளது.

தம்பதிகள்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு, ராஜக்கல் கிராமம், கூத்தாண்டவர் நகரில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 48). இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தனலட்சுமி (வயது 36). இவர்கள் இருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தமப்திகளுக்கு ஹரித்ரா ஸ்ரீ என்ற 16 வயது மகளும், விஜயஸ்ரீ என்ற 13 வயது மகளும், பத்ரி நாராயணன் என்ற 5 வயது மகனும் இருக்கின்றனர். தனலட்சுமி வீட்டு வேலை செய்து வருகிறார். 

இதையும் படிங்க: பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்.. காதலன் பதறவைக்கும் செயல்.. தஞ்சாவூரில் பேரதிர்ச்சி.!

துர்நாற்றம்:

இதனிடையே, சம்பவத்தன்று தனலட்சுமியை காணவில்லை என விஜயகுமார் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். வீட்டிலும் துர்நாற்றம் வீசத்தொடங்கவே, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த அதிகாரிகள் விஜயகுமாரின் வீட்டில் சோதனை செய்தபோது, சமையல் அறை பரணில் தனலட்சுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனையடுத்து, விஜயகுமாரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். 

கள்ளக்காதல்:

அதாவது, தனலட்சுமிக்கு சின்னவரிக்கம் கிராமத்தில் வசித்து வரும் குமரேசன் என்ற 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் அடிக்கடி தனிமை சந்திப்பும் நடந்துள்ளது. தனலட்சுமி வீட்டு வேலைக்குச் சென்று பின் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். விஜயகுமார் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வளர்த்து வந்துள்ளார். தனலட்சுமியின் கள்ளக்காதலை அறிந்த விஜயகுமார், மனைவியை கண்டித்தும் பலனில்லை. மனைவி கணவரை ஆபாசமாக திட்டி வந்துள்ளார்.

ஆம்பளையா நீ?

கடந்த 28ம் தேதி தம்பதிகள் உல்லாசமாக இருந்தபோது, விஜயகுமாரை பார்த்து தனலட்சுமி நீ ஆம்பளையா? என கேட்டு அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு கள்ளக்காதலனுடன் சினிமாவுக்குச் சென்ற மனைவி வீடு திரும்பியுள்ளார். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, "நான் எங்காவது செல்வேன், வருவேன். நீ யார்? என்னை கேட்க. ஆம்பளையா நீ" என கேட்டுள்ளார்.

குழந்தைகளின் நிலை?

குமரேசனும் நானும் உல்லாசமாக இருந்துவிட்டு வந்துள்ளோம். நீ அதற்கு சரியான ஆளாக இல்லை என்றால், அதற்கு நான் பொறுப்பா? என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் தனலட்சுமியை கொலை செய்துள்ளார். பின் மறுநாள் காலையில் வழக்கம்போல குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய நிலையில், அக்கம் பக்கத்தினரிடம் மனைவியை காணவில்லை என கூறியுள்ளார். ஆனால், துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து தெரிவித்த தகவலில் அனைத்தும் அம்பலமானது. 3 குழந்தைகளும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் ரகசியம் வெளிவந்ததால் ஆத்திரம்.. கணவரை ஸ்கெட்ச் போட்டு கொன்ற மனைவி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #vellore #ஆம்பளையா நீ #காதல் கள்ளக்காதல் #உல்லாசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story