ஊர் மக்களுக்கு பயந்து புதருக்குள் பதுங்கிய தவெக நிர்வாகி.. தர்ம அடி கொடுக்க காரணம் என்ன?
Nagapattinam News: மூதாட்டியிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது.
தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மர்ம நபர்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், இருக்கை வடக்குத் தெருவில் வசித்து வருபவர் கஸ்தூரி (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவில், வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, முகத்தில் வெள்ளைநிற துணி கட்டிய மர்ம நபர் வீட்டுக்குள் வந்துள்ளார்.
இதையும் படிங்க: போதையில் அத்துமீற முயன்ற காவலர்.. ஆப்படித்த உயர் அதிகாரிகள்.. திக்., திக்., சம்பவம்.!
தப்பிக்க முயற்சி:
அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் கஸ்தூரிணியின் 5 சவரன் தங்க நகையை பறிக்க முயற்சித்து இருக்கிறார். சுதாரித்து தப்பித்த மூதாட்டி சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த மருமகள் சரண்யா, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இதற்குள் மர்ம நபரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.
புதருக்குள் பதுங்கல்:
உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்ட நிலையில், மர்ம நபரை துரத்திச் சென்றுள்ளார். அடர்ந்த கருவேல மரங்கள் நிறைந்த புதருக்குள் சென்று பதுங்கியவரை பிடித்த மக்கள், மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த கீழ்வேளூர் காவல்துறையினர், நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
கைது:
விசாரணையில், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கீழ்வேளூர், இருக்கை, மேலத்தெருவில் வசித்து வரும் சேகர் என்பவரின் மகன் பாரதி (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் தவெக கிளை பொறுப்பாளராகவும் இருக்கிறார். இதனையடுத்து, பாரதியை வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதலிக்கு கிப்ட் கொடுக்க ஆடு திருட்டு - தவெக நிர்வாகிக்கு தர்ம அடி.!