காதலிக்கு கிப்ட் கொடுக்க ஆடு திருட்டு - தவெக நிர்வாகிக்கு தர்ம அடி.!
Salem News: ஆடு திருடிய வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலிக்கு விலை உயர்ந்த பரிசு கொடுக்க ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பட்டியில் இருந்த ஆடுகள்:
Salem TVK: சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கரிசல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவர் விவசாயி ஆவார். ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினத்தில் இரவு நேரத்தில், ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கூலித்தொழிலாளிக்கு எமனான அந்த ஒரு விஷயம்.. கோயிலில் நடந்த கொடூர சம்பவம்.!
ஆடு திருட்டு முயற்சி:
இதனிடையே, நேற்று அதிகாலை நேரத்தில் பட்டிக்கு வந்த 2 நபர்கள், வேலியை உடைத்து ஆடு திருடி செல்ல முயற்சித்துள்ளனர். இதனைக்கண்டு நாய்கள் குறைக்கவே, சத்தம் கேட்டு மணி வெளியே வந்துள்ளார். அப்போது, மர்ம நபர்களின் செயலைக்கண்டு அபயக்குரல் எழுப்பி இருக்கிறார்.
தர்ம அடி:
சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இருவரையும் பிடித்தனர். அப்போது, ஒரு நபர் தன்னை தவெக நிர்வாகி என அடையாளப்படுத்திக்கொண்டு, என்னை எதுவும் செய்ய இயலாது என மிரட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
காவல்துறை விசாரணை:
பின் ஓமலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நேரில் வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளைஞர் செங்கனூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் தனுஷ் (வயது 21) என்பது தெரியவந்தது. அவருடன் 15 வயது சிறுவனும் பிடிக்கப்பட்டார். காதலிக்கு விலை உயர்ந்த பரிசு வாங்க ஆடு திருட வந்து இவர் சிக்கிக்கொண்டுள்ளார். இளைஞரிடம் இருந்த டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!