×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கார், பைக் இருக்கா? காதலி கேட்ட கேள்வி.. கழுத்தை நெரித்த காதலன்.. திருச்சியில் நடந்த திகில் சம்பவம்.!

Trichy News: காதலித்த பெண்ணை கொலை செய்ய முயன்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

3 ஆண்டுகள் காதலித்துவிட்டு கார், பைக் இருக்கிறதா? என காதலி கேட்ட ஆத்திரத்தில் நடந்த கொலை முயற்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

பெண் கொலை முயற்சி:

திருச்சியில் உள்ள ஐஜி பங்களா பகுதியில், நேற்று இரவு நேரத்தில் காதல் ஜோடி ஒன்று நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தது. பின் திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை துப்பட்டா கொண்டு நெரித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் பெண் மயங்கி விழுந்த நிலையில், ஆக்கிரம் தீராத இளைஞர் அங்கு இருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டுள்ளார். 

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!

தக்க நேரத்தில் கிடைத்த உதவி:

இந்த சண்டையை நேரில் பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஐஜி பங்களாவில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளும் விரைந்து வந்து, தாக்குதல் சம்பவத்தில் மயங்கி விழுந்த பெண்ணை மீட்டு உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை கேகே நகர் காவல் நிலயத்தில் ஒப்படைத்தனர். அங்கு இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. 

கல்லூரி காதல்:

அப்போது, கைதானவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியைச் சேர்ந்த நவீன (வயது 22) என்பது தெரியவந்தது. இவர் திருச்சியில் செயல்படும் தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்துவிட்டு, தற்போது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில், தில்லைநகரில் வேலை பார்த்து வருகிறார். இதேபோல, திருச்சியில் இருக்கும் வேறொரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், அவரும் படிப்பை முடித்துவிட்டு தற்போது திருச்சி அரசு கலைக் கல்லூரியில் எம்பிஏ பயின்று வருகிறார். பகுதிநேர வேலையும் பார்த்து வருகிறார். 

கேள்வியால் நடந்த களேபரம்:

இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இந்த விசயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் இளைஞர் காதலியை கொலை செய்ய துணிந்து இருக்கிறார். மேலும், காதலனிடம் காதலி உன்னிடம் கார், பைக் உள்ளிட்டவை இருக்கிறதா? என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொலை முயற்சி நடந்துள்ளது. காதலியை இளைஞன் கொலை செய்ய முயற்சிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: 'ஆயிரம் இருந்தாலும் அவ பொண்டாட்டி.. நீ...' மனைவியை திட்டியதால் கொடூர கொலை.! திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #திருச்சி #குற்றம் #கொலை முயற்சி #காதலன் காதலி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story