×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டாவது பிரசவத்தில் நடந்த சோகம்.. தாய்-சேய் மரணம்.. கண்ணீரில் உறவினர்கள்.!

தலைமை காவலரின் மனைவி பிரசவத்தின் போது உயிரிழந்தார்.

Advertisement

Virudhunagar News: 26 வயதுடைய இளம்பெண் இரண்டாவது பிரசவத்தின்போது திடீரென உயிரிழந்தார். குழந்தையும் தாயுடன் உயிரிழந்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

காவலரின் மனைவி:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கள் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். தினேஷின் மனைவி ரேணுகா தேவி (வயது 26). தம்பதிகளுக்கு ரிதிஷா என்ற 3 வயதுடைய மகள் இருக்கிறார்.

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுமி கொலை.. தாய் & கள்ளக்காதலன் கைது..!

இரண்டாவது பிரசவம்:

இதனிடையே, இரண்டாவது முறையாக கருத்தரித்து இருந்த ரேணுகா, பிரசவத்துக்காக விஸ்வநத்தம் சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சைக்காக இருவரும் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் கண்ணீர்:

இதனால் ரேணுகா தேவியின் குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் என புகார் தெரிவித்து வைக்கவுதாம் செய்தனர். மேலும், குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கவும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. ரேணுகா தேவியின் உடலை எடுத்துச்சென்ற பின்னர் நிவாரண தொகையை வழங்க முடியாது என கூறிய நிர்வாகம், வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு 20 பேர் மறியல் செய்த நிலையில், அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Virudhunagar #pregnant woman #சிவகாசி #தாய் சேய் மரணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story