வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
TN Weather Update: சென்னை, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் (Weather Update) தொடர்பான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்து வந்தது. மேலும், டிட்வா புயல் தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்த்த நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் கனமழை தொடர்ந்து வருகிறது.
அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை:
இந்நிலையில், இரவு 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Red Alert: 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.. மக்களே கவனம்.!
ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Rain Holiday: சென்னை மாணவர்களுக்கு குட்நியூஸ்.. நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!