Red Alert: 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.. மக்களே கவனம்.!
சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடி சென்னையை நோக்கி பயணித்து வருகிறது.
இன்றைய வானிலை:
இந்த புயல் இலங்கையை கடந்த பின் வங்கக்கடல் வழியே நகர்ந்து பின் கடலுக்குள்ளேயே புயலின் முந்தைய நிலையை அடைந்து வலுவிழந்தது. டிட்வா புயல் அடுத்த 12 மணி நேரத்திற்கு பிறகு மேலும் வலுக்குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. இன்று எங்கெல்லாம் விடுமுறை?.!
ரெட் அலர்ட்:
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 8% வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தை விட டிசம்பர் மாதத்தில் புயல் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாலும், கனமழை கொட்டும் என்பதாலும் மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணிநேரத்திற்கு கொட்டும் மழை:
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் லேசான மழையும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக கனமழை.. அடுத்த 24 மணிநேரத்திற்கு உஷார்.. இன்றைய வானிலை நிலவரம்.!