×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

JUSTIN: +2 ரிசல்ட்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்ன சொன்னார் தெரியுமா? 

Anbil Mahesh Poyyamozhi: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்ந்தது மகிழ்ச்சியை தருகிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement

கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஈரோடு முதலிடம்:

12th Results Tamilnadu 2026: தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு எழுதியவர்களில் மொத்தமாக 4.18 லட்சம் மாணவிகள், 3.72 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

இதையும் படிங்க: JCD Prabhakar: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்.!

முன்னாள் அமைச்சர் கருத்து:

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக +2 தேர்ச்சி விகிதத்தில் 0.17% உயர்வு! 

நன்றி நன்றி!

அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று SLAS அறிக்கையை முன்னிறுத்தி, தலைமையாசிரியர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக அவர்கள் முன்னெடுத்த முயற்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 

மாணவச் செல்வங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்வு முடிவுகள் என்பது உங்களுக்கானது மட்டுமல்ல. எங்களுக்குமானதுதான்! மறுவாய்ப்பு தேவைப்படும் மாணவர்கள் உடனடியாக துணைத் தேர்வெழுதி வெற்றி பெற Advance வாழ்த்துகள்!" என தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷின் பதிவு:

இதையும் படிங்க: #Breaking: மாணவிகள் டாப் டக்கர்.. வெளியானது +2 ரிசல்ட்.. ஈரோடு முதலிடம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school students #anbil mahesh #பள்ளிக்கல்வித்துறை #பொதுத்தேர்வு முடிவுகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story