#Breaking: மாணவிகள் டாப் டக்கர்.. வெளியானது +2 ரிசல்ட்.. ஈரோடு முதலிடம்.!
TN School Results: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழகமே எதிர்பார்த்த 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
தேர்வு முடிவுகள்:
12th Results Tamilnadu 2026: தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையில் கீழ் பயின்று, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையவழியிலும், வாட்ஸப்பிலும் தெரிந்துகொள்ளலாம். மாணவர்களின் அலைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING! மாணவர்களே.... பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே-8 ஆம் தேதி வெளியாகாது! அதிரடி காரணத்தால் கல்விவித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!
மாணவிகள் டாப்:
இந்த ஆண்டு தேர்வை பொறுத்தவரையில், மொத்தமாக 7.91 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 4.18 லட்சம் மாணவிகள், 3.72 லட்சம் மாணவர்கள் ஆவார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக மாணவிகள் 97% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.19% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்ச்சி விகிதம்:
அரசுமேல்நிலைப்பள்ளிகள் மொத்தமாக 489 முழு தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளையும் சேர்த்து ஈரோடு 98.70% தேர்ச்சி பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகளில் ஈரோடு மாவட்டம் முதலிடமும், சிவகங்கை, திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடத்தையும் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
தற்காலிக மதிப்பெண் பட்டியல் 13ம் தேதி முதல் வழங்கப்படும்.
இதையும் படிங்க: BREAKING: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது! வெளியான அதிரடி அறிவிப்பு.!!!