மகிழ்ச்சி செய்தி! மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500... தமிழக அரசு சொன்ன சூப்பர் அறிவிப்பு!!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். தகுதியுள்ள பெண்கள் அனைவரும் திட்டத்தில் இடம்பெறுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பேசிய அவர், பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.
ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் அறிவிப்பு
தனது சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் ரமேஷ், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஷ்... பத்தரப்பதிவுத் துறையில் 6 மாதத்தில் அம்புட்டும் மாறப்போகுது! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு.!!!
வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள்
திட்டத்தில் சேர விண்ணப்பிக்க பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தங்களது நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் கூறினார். இதையடுத்து, திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது தகுதியுள்ள பெண்களின் பெயர்கள் எதுவும் விடுபடாமல் சேர்க்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
தகுதியான அனைவருக்கும் பயன்
ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டம் நடைமுறைக்கு வந்ததும், தகுதி அடிப்படையில் அனைத்து பயனாளிகளும் பயன்பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் எந்தவித குழப்பமும் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஷாக் நியூஸ். மகளிருக்கு ரூ.2,500.. இவர்களுக்கு நிச்சயம் கிடையாது.. புதிய விண்ணப்பங்களில் அரசு காட்டிய கறார் முகம்..!