BREAKING: பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசுத் தேர்வுகள் இயக்கம்..!!!
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 அன்று வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. 11-ம் வகுப்பு அரியர் தேர்வு முடிவுகள் மே 20 வெளியீடு.
தமிழகத்தில் மாணவர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுத் தேர்வுகள் இயக்கம், இந்த ஆண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மே 8 அன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மார்ச் 26-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
11-ம் வகுப்பு அரியர் தேர்வு முடிவு
இதற்கிடையில், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரியர் தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் தேர்வு நிலையை அறிய மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! வங்கி கணக்கில் ரூ.4000.... தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!!
பள்ளி மாணவர்களின் கல்வி பயணத்தில் முக்கியமான கட்டமாக கருதப்படும் இந்த தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் வெளியாக உள்ள பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தொடர்ந்து கண்காணிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.12000.... தமிழக அரசின் சலுகை திட்டத்தை மிஸ் பண்ணிட்டாத்தீங்க....!!!