×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: மகிழ்ச்சி செய்தி! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு!!!

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். விவசாயிகள் வரவேற்பு.

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உழவர் நலன் தொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சன்னரக நெல்லுக்கு ரூ.2,750

மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையும் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.289 ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு, மொத்தமாக ரூ.2,750 வழங்கப்படும். பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.159 கூடுதலாக வழங்கப்பட்டு, மொத்தம் ரூ.2,600 கிடைக்கும்.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்.... போயஸ் கார்டனுக்கு குடியேறப் போகும் முதல்வர் விஜய்... இதுதான் காரணமா? !!!

கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000

கரும்பு விவசாயிகளுக்கும் முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு மொத்தம் ரூ.4,000 கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதுடன், சாகுபடியில் ஆர்வத்தையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கூடுதல் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணமாக அமையும் என கூறப்படுகிறது.

வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படும் இந்த அறிவிப்பு மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு இந்த உயர்வு உதவும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: கரூரில் விஜய் பேசிய "ஓட்டை பாத்திரம் " விமர்சனத்திற்கு நச் பதிலடி கொடுத்த திமுக...! வாயைவிட்டு இப்படி மாட்டிக்கிட்டாரே....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நெல் ஊக்கத்தொகை #கரும்பு விவசாயிகள் #vijay #உழவர் நலன் #Tamil Nadu Farmers
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story