×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கரூரில் விஜய் பேசிய "ஓட்டை பாத்திரம் " விமர்சனத்திற்கு நச் பதிலடி கொடுத்த திமுக...! வாயைவிட்டு இப்படி மாட்டிக்கிட்டாரே....!!!

கரூரில் நினைவுச் சின்னம் அமைப்பதாக முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், அவரது 'ஓட்டை பாத்திரம்' விமர்சனத்திற்கு நிதி ஆயோக் உரையை சுட்டிக்காட்டி திமுக கடும் பதிலடி கொடுத்துள்ளது.

Advertisement

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றது முதல் 10 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் மீண்டும் கரூர் வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக கரூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதே மேடையில் திமுக ஆட்சியின் நிதி நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஓட்டை பாத்திரம்’ விமர்சனத்தால் சூடுபிடித்த அரசியல்

பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், அமைச்சர் மரியா வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை குறிப்பிட்டு, திமுக ஆட்சியில் 'ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியதுபோல்' நிதி நிர்வாகம் நடைபெற்றதாக விமர்சித்தார். அரசு நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து திமுகவே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெள்ளை அறிக்கையை வெளிச்சம் போட்டு காட்டிய நிதி அமைச்சர் மரிய வில்சன் ! இப்போ வருஷத்துக்கு வட்டி மட்டுமே 67,000 கோடி கட்டுறோம்! வெளியான பகீர் ரிப்போர்ட்..!!!

நிதி ஆயோக் உரையை முன்வைத்து திமுக பதிலடி

விஜய்யின் இந்தக் கருத்துக்கு திமுக தரப்பு அவரது டெல்லி நிதி ஆயோக் கூட்ட உரையையே சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளது. அப்போது தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதையும், நாட்டின் பெண் தொழிலாளர்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும் முதலமைச்சர் பெருமையாக குறிப்பிட்டிருந்தார் என்று திமுகவினர் நினைவூட்டியுள்ளனர். அப்படியிருக்க, தற்போது மாநில நிதி நிலையை விமர்சிப்பது முரண்பாடான நிலைப்பாடு என அவர்கள் வாதிடுகின்றனர்.

நலத்திட்டங்கள் குறித்தும் எழுந்த கேள்விகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதையும், அண்மையில் மின்சாரத் துறைக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதையும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. மாநில கஜானா காலியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இத்தகைய புதிய அறிவிப்புகள் எப்படி வெளியிடப்படுகின்றன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதனால், வெள்ளை அறிக்கை தொடர்பாக தொடங்கிய விவாதம் தற்போது கரூர் பொதுக்கூட்டம், நிதி ஆயோக் உரை மற்றும் மாநில நிதி நிலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு தவெக - திமுக இடையேயான தீவிர அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.

 

இதையும் படிங்க: கரூரில் உயிரிழந்தவர்கள் முதல் தற்போதைய அரசியல் வரை புட்டு புட்டு வைத்த முதல்வர் விஜய்! அதிரும் அரசியல் களம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #கரூர் #dmk #White Paper #NITI Aayog
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story