×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெள்ளை அறிக்கையை வெளிச்சம் போட்டு காட்டிய நிதி அமைச்சர் மரிய வில்சன் ! இப்போ வருஷத்துக்கு வட்டி மட்டுமே 67,000 கோடி கட்டுறோம்! வெளியான பகீர் ரிப்போர்ட்..!!!

தமிழகத்தின் நிதிநிலை குறித்து புதிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநிலக் கடன் 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், வட்டிச்செலவு ஆண்டுக்கு 67,000 கோடியை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தின் நிதிநிலை குறித்து புதிய அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அறிக்கை, இன்று மாலை நிதியமைச்சர் மரிய வில்சனால் வெளியிடப்பட்டது. மாநிலத்தின் கடன் சுமை மற்றும் வருவாய் நிலை தொடர்பாக பல முக்கிய தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

ஆண்டுக்கு 67,000 கோடி ரூபாய் வட்டிச்செலவு

அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடன்களின் தாக்கம் தற்போது மாநில நிதியில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். அதன்படி, தமிழக அரசு ஆண்டுதோறும் வெறும் வட்டிக்காக மட்டுமே 67,000 கோடி ரூபாய் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இது மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

5 லட்சம் கோடியில் இருந்து 13.18 லட்சம் கோடியாக உயர்ந்த கடன்

தகவலின்படி, தமிழகத்தின் மொத்த கடன் சுமை கடந்த காலத்தில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு மாநில நிதி நிர்வாகத்தில் கடுமையான சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: 10 லட்சம் கோடி கடன்! எதாச்சும் சொல்லி சமாளிக்காதீங்க முதல்வர் விஜய்யே... ஆட்சியை ஆக்கபூர்வமாக நடத்துவது எப்படின்னு பாருங்க! தங்கம் தென்னரசு காட்டம்..!!!

வருவாய் வீழ்ச்சிக்கு ஊழல் காரணம் என குற்றச்சாட்டு

முந்தைய அரசு முதலீட்டு திட்டங்களுக்காக அல்லாமல் அன்றாட செலவுகளுக்காக அதிகளவில் கடன் பெற்றதாகவும், கனிமவளத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மாநிலத்தின் சொந்த வரி வருவாயை பாதித்ததாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். இதனால் வருவாய் பற்றாக்குறை கோவிட் பெருந்தொற்று காலத்தை விடவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒருகாலத்தில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாட்டின் நிதிநிலையை மீட்டெடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், அதற்கான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்பில்.... சொன்ன சொல்லை இன்னும் 2 வாரத்தில் காப்பாற்ற போகும் முதல்வர் விஜய்! அம்பலமாக போகும் கஜானா ரகசியம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Nadu Finance #வெள்ளை அறிக்கை #State Debt #மரிய வில்சன் #தமிழக அரசியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story