×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: மகிழ்ச்சி செய்தி...! மாதாந்திர சம்பள ஊதிய உயர்வு...... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!!

தமிழக அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ரூ.35,000 வழங்கப்படும்.

Advertisement

தமிழக அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கையை ஏற்று, மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.35 ஆயிரமாக உயர்ந்த தொகுப்பூதியம்

அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இதையும் படிங்க: அப்பாவி புருஷன்... தாகாத உறவை தட்டிக்கேட்ட கணவன்! கள்ளக்காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி! விசாரணையில் வெளிவந்த நடுங்க வைக்கும் பின்னணி...!!!

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கும் உயர்வு

அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதனால் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பயன்பெற உள்ளனர்.

நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு

தொகுப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்பது கவுரவ விரிவுரையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில், சட்டமன்றத்தில் வெளியான அறிவிப்பு அவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.

 

இதையும் படிங்க: Sivaganga News: கத்திக்கு கத்தியால் பதில்.. சட்டக்கல்லூரி மாணவர் எடுத்த ஆயுதம் அவருக்கே எமனான சோகம்.. கொடூர கொலை..! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கவுரவ விரிவுரையாளர்கள் #Tamil Nadu Colleges #தொகுப்பூதியம் உயர்வு #viswanathan #Polytechnic Lecturers
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story