Sivaganga News: கத்திக்கு கத்தியால் பதில்.. சட்டக்கல்லூரி மாணவர் எடுத்த ஆயுதம் அவருக்கே எமனான சோகம்.. கொடூர கொலை..!
பெண் தர மறுப்பு தெரிவித்த இருவர் வெட்டுக்காயத்துடன் தப்பிய நிலையில், பதிலுக்கு பதிலாக எடுக்கப்பட்ட ஆயுதம் உயிரை பழிவாங்கி இருக்கிறது.
மானாமதுரையில் திரைப்பட பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
உறவினர்கள்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சின்னபுதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் வெள்ளைச்சாமி. இவரின் உடன்பிறந்த சகோதரி பாக்கியலட்சுமி. இவரின் மகள் அபிநயா. அபிநயாவுக்கும் - வெள்ளைசாமியின் மூத்த மகன் முருகேசனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: தங்கம் விலை.. ஏற்றதால்.. மூதாட்டி கொலை.. பெண்களே உஷார்.. சர்க்கரை தூவி கொலையை மறைக்க முயன்ற காதல் ஜோடி கைது.!
ஒருதலைக்காதல்:
வெள்ளைசாமியின் இளைய மகனான சிவபாலன் (வயது 30), சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் தனது அண்ணி அபிநயாவின் உடன்பிறந்த சகோதரியான தாரணி என்பவரை 4 ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த மே 19 ம் தேதி சிவபாலன் தாரணியில் பெற்றோரிடம் சென்று, காரணியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தி தகராறு செய்துள்ளார்.
புகார்:
இந்த விஷயம் குறித்து தாரணியில் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சிவபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த சிவபாலன், தாரணியை திருமணம் செய்து வைக்கக்கூறி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
தகராறு:
கடந்த வாரத்தில் தாரணியில் வீட்டுக்குச் சென்ற சிவபாலன் தகராறு செய்தபோது, தாரணியில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், நேற்று காலை அரிவாளுடன் காரணியை தேடி வந்த சிவபாலன், கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தடுத்த தாரணியில் தந்தை முருகேசனின் கையில் வெட்டியுள்ளார். மேலும், தாரணியில் சகோதரர் அருண் ராஜாவையும் வெட்ட முயற்சித்து இருக்கிறார்.
கொலை:
ஒருகட்டத்தில் சிவபாலனின் செயல்கள் எல்லைமீறி கொலை முயற்சி வரை சென்றதால் ஆத்திரமடைந்த தந்தை - மகன் இருவரும் சேர்ந்து சிவபாலனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.. இந்த சம்பவத்தில் சிவபாலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சிவபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முருகேசன் (வயது 50), அவரின் மகன் அருண் ராஜா (வயது 19) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.. எமனான காதல்..!