×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"தப்பு பண்ணிட்டோம் தூக்குல தொங்கிடலாம்".. கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை.. இறுதியில் பறிபோன உயிர்.!

Tiruppur News Today: கள்ளகாதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் தூக்கில் தொங்கினார்.

Advertisement

காவல்துறை விசாரணைக்கு பயந்த நபர் ஒருவர், குற்றம் இழைத்தபின் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.

கள்ளக்காதல் பழக்கம்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 43). இவர் தொழிலாளி ஆவார். தற்போது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனிடையே, அதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது கணவரை பிரிந்து 15 வயது மகளுடன் தனியாக இருக்கிறார். சக்திவேலுக்கும் - அந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

சிறுமிக்கு துன்புறுத்தல்:

இதனையடுத்து, கள்ளக்காதல் ஜோடி சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சக்திவேல் வழக்கம்போல கள்ளக்காதலி வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு சிறுமி இருந்துள்ளார். சக்திவேல் அம்மா எங்கே என்று சிறுமியிடம் கேட்க, அவர் வேலைக்குச் சென்றுள்ளதாக கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை:

சிறுமியை ஆபாசமாகவும் வீடியோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அம்மாவிடம் சிறுமி தனக்கு நேர்ந்ததை கண்ணீர்விட்டபடி கூறி இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன பெண்மணி குழந்தைகள் நலவாரியத்திடம் புகார் அளித்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை:

இந்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவில் சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். பின் மீண்டும் நேற்று காலையில் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது, காவல்துறை விசாரணை & நீதிமன்ற தண்டனைக்கு பயந்த சக்திவேல், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harassment #Tiruppur #illegal affairs #கள்ளக்காதலி மகள் #பாலியல் தொல்லை #தற்கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story