×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விடுதியில் உள்ள பெண்களை அப்படி இப்படி எடுத்து.... பல்வேறு கோணங்களில் அனுப்பு! காதலனை குஷிப்படுத்த காதலி அனுப்பின ஆபாச வீடியோ....பெண் சொன்ன பகீர் வாக்குமூலம்...!!!

நெல்லை பாளையங்கோட்டையில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்து அனுப்பியதாக பெண் கைது செய்யப்பட்டார். காதலனை தேடி போலீசார் தீவிரம்.

Advertisement

நெல்லை பாளையங்கோட்டையில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மகரஜோதி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அவரது காதலன் கண்ணனைத் தேடி தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்துள்ளனர்.

விடுதிப் பெண்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்

பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதியில், நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவைச் சேர்ந்த மகரஜோதி (39) தனது குழந்தைகளுடன் சில மாதங்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்தார். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த அவரது நடவடிக்கைகளில் சமீபமாக மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாம்மா உன்னை ஊருக்குள் இறக்கி விடுகிறோம்.... வாய் பேச முடியாத பெண்ணுக்கு நடந்த கொடூரம்! பதுங்கியிருந்து 2 பேர் கைது.... புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி...!!!

அதன்பின், விடுதியில் தங்கியிருந்த சில பெண்கள் தங்களை செல்போனில் ரகசியமாக படம் பிடிப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால் எச்சரிக்கையான விடுதி ஊழியர்கள், மகரஜோதியின் செல்போனை வாங்கி சோதனை செய்தனர்.

செல்போனில் இருந்த ஆபாச புகைப்படங்கள்

அப்போது, அங்கு தங்கியிருந்த பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவாகியிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்தப் பதிவுகள் கோவையில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு அனுப்பப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விடுதியின் காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலின்படி, இன்ஸ்பெக்டர் நாககுமாரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

காதலனை குஷிப்படுத்தவே செய்தேன்

தொடர்ந்து, நேற்று முன்தினம் போலீசார் மகரஜோதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, விடுதியில் தங்கியிருந்த பெண்களை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து அனுப்புமாறு தனது காதலன் கண்ணன் வற்புறுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், காதலனை மகிழ்விப்பதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கண்ணன் தலைமறைவாக உள்ளார்.

இதையடுத்து, அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கோவையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கண்ணன் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி! அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tirunelveli #Palayamkottai #பெண்கள் விடுதி #police investigation #Secret Video Case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story