அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து.. அலட்சியமாக சாலையை கடந்த கல்லூரி மாணவிகள்.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்..!
Namakkal Accident Video: சாலையை அலட்சியமாக கடக்க முயற்சித்தால் பரிதாபமாக உயிர் பறிபோனது.
இருசக்கர வாகனம் - பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மாணவிகள்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு, சக்கராம்பாளையம் பகுதியில் நேற்று நடந்த விபத்தில், கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க: BREAKING: பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.300 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்த குட் நியூஷ்!!!
விபத்து:
இதனிடையே, சம்பவத்தன்று மாலை நேரத்தில் கல்லூரி மாணவிகள் சபிதா (வயது 18), நிவேதா (வயது 16), பள்ளி மாணவிகள் தனுஸ்ரீ (வயது 11), அபிநயா (வயது 10) ஆகியோர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். அச்சமயம் சாலையை கடக்க முற்பட்டனர்.
பேருந்து:
அப்போது, எதிர்திசையில் வந்த தனியார் கல்லூரி பேருந்து, சாலையை கடந்த மாணவிகளின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து நால்வரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு மாணவிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதன் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் சாலையை கடக்கும்போது, எதிர்திசையில் வந்த பேருந்தை கவனித்து பொறுமையாக வந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.
பதறவைக்கும் காட்சிகள்:
இதையும் படிங்க: கல்லூரி மாணவிக்கு குடும்பத்தினர் கண்முன் நேர்ந்த சோகம்.. வீடு சுத்தம் செய்யும் பணியில் விபரீதம்.!