ஆம்னி பேருந்து - கார் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பரிதாப பலி.!
Trichy News: சமயபுரத்தில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கார் - ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிர்ப்பலி நடந்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, கோட்டைக்காடு கிராமத்தில் வசித்து வருபவர்கள் பாண்டியன் (வயது 49), கௌசல்யா (வயது 46), வளர்மதி (வயது 45), தில்லையம்மாள் (வயது 48), கோகுலவாணி (வயது 13), மணிசர்மா (வயது 16), திருநாவுக்கரசு (வயது 52), தனலட்சுமி (வயது 47), பவீன் (வயது 9).
இதையும் படிங்க: Thanjavur: கியாஸ் சிலிண்டர் வெடித்து நேர்ந்த சோகம்.. 3 பேர் பரிதாப பலி.!
காரில் பயணம்:
இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று கோட்டைக்காட்டில் இருந்து தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு காரில் புறப்பட்டுள்ளனர். மகேஸ்வரன் காரை இயக்கி இருக்கிறார். அனைவரும் தஞ்சாவூர் பெரியகோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, இரவில் சமயபுரம் புறப்பட்டுள்ளனர்.
அதிகாலை நேரம்:
அதிகாலை சுமார் 2 மணியளவில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் சாலையை கடந்து, பள்ளிவிடாய் பாலம் அருகில், கோயிலுக்கு இடதுபுற சர்விஸ் சாலையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்றதால், மகேஸ்வரன் காரை திடீரென நிறுத்தி பின்னோக்கி இயக்கி வந்துள்ளார்.
பேருந்து:
அச்சமயம், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த ஆம்னி பேருந்து, காரின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பாண்டியன், தனலட்சுமி, சிறுவன் பவீன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், படுகாயத்துடன் துடித்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #JUSTIN: நொடியில் நடந்த கோர விபத்து.. இளம் தம்பதி, பச்சிளம் பிஞ்சு என 4 பேர் பலி.. மதுரையில் சோகம்.!