Thanjavur: கியாஸ் சிலிண்டர் வெடித்து நேர்ந்த சோகம்.. 3 பேர் பரிதாப பலி.!
Thanjavur News: சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கீற்றுக்கொட்டகை தீப்பிடித்து சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
தம்பதி:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம், சின்ன அம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகையன் (வயது 51). இவர் விவசாயி ஆவார். முருகையனின் மனைவி செல்வி (வயது 41). தம்பதிகளுக்கு 15 வயதுடைய அபிநயா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஜூலை 30 ம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில், முருகையனின் வீட்டின் முன்புறம் இருந்த கீற்றுக்கொட்டகை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதையும் படிங்க: கார் - டூவீலர் மோதி பயங்கரம்.. காவு வாங்கிய ஆபத்து வளைவு.. 3 இளைஞர்கள் துள்ளத்துடிக்க பலி.!
வெடித்து விபத்து:
அச்சமயம், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், கீற்றுக்கொட்டகையில் இருந்த சமையல் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் செல்வி, அபிநயா, காசிநாதன் (வயது 37), ராஜசேகர் (வயது 45), பழனிவேல் (வயது 40), வேம்பையன் (வயது 47), கலையரசி (வயது 38), செல்வராஜ் (வயது 70), காளியம்மாள் (வயது 70), ரமேஷின் மகன் புவனேஸ்வரன் (வயது 15) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிகிச்சை:
இவர்களில் செல்வி, அபிநயா, பழனிவேல், காசிநாதன், ராஜசேகரன், வேம்பையன், கலையரசி உட்பட 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டனர். பிற 3 பேர் லேசான காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து மரணம்:
இவர்களில் பழனிவேல் நேற்று முதினமும், காசிநாதன் மற்றும் வேம்பையன் அடுத்தடுத்து என நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து திருவோணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுவனால் நேர்ந்த விபத்து.. 3ம் வகுப்பு சிறுமியின் உயிர் பிரிந்த சோகம்..! பெற்றோர் கண்ணீர்.!