×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுவனால் நேர்ந்த விபத்து.. 3ம் வகுப்பு சிறுமியின் உயிர் பிரிந்த சோகம்..! பெற்றோர் கண்ணீர்.! 

Tenkasi News: ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுமி உயிரிழந்தார். 

Advertisement

உரிமம் பெறாமல் சிறுவன் இயக்கிய ஆட்டோவால் நேர்ந்த விபத்து சிறுமியின் உயிரை பறித்தது. 

பள்ளி சிறுமி: 

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கரும்புளியூத்து கிராமத்தில் வசித்து வருபவர் பீட்டர். இவரின் மகள் ஜீவிதா (வயது 8). சிறுமி மாறாந்தை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

விபத்து: 

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், கடைக்கு சென்றுவிட்டு வந்துகொண்டு இருந்தார். அப்போது, சாலையை கடக்க முயற்சித்தபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. 

படுகாயம்: 

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட உள்ளூர் மக்கள், சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமியின் உயிர் பிரிந்தது. 

விசாரணை: 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சுமை ஆட்டோவை ஒட்டி வந்ததாக 17 வயது சிறுவன், வாகன உரிமையாளரான கணேசன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். 

இதையும் படிங்க: பிஸ்கட் சாப்பிடுவதில் அக்கா-தம்பி சண்டை.. பரிதாபமாக பறிபோன உயிர்.. திண்டுக்கல்லில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tenkasi #accident #Schoolgirl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story