×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 வயது சிறுமி வாந்தி எடுத்ததால் சாலையோரம் நிறுத்திய பைக்! அடுத்த சில நிமிடங்களில் நடந்த பேரதிர்ச்சி! இப்படியா நடக்கணும்... கதறிஅழும் பெற்றோர்...!!!

திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி புறவழிச்சாலையில் கார் மோதி 5 வயது சிறுமி உயிரிழந்தார். விபத்தில் தொடர்புடைய தலைமைக்காவலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

திருவள்ளூர் அருகே சென்னை - திருப்பதி புறவழிச்சாலையில் ஏற்பட்ட சோக விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் அருகே நின்றிருந்தபோது கார் மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த தலைமைக்காவலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வாந்தி காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனம்

திருநின்றவூரைச் சேர்ந்த சாந்தகுமார் – ரம்யா தம்பதியரின் 5 வயது மகள் தானிகா சாரா, தனது தாயின் சக ஊழியரான குணசேகரனுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமிக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிவகங்கையில் ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! மாலையில் ஆடுகள் மட்டும் திரும்பிய நிலையில்.... மாணவியை தேடிய பெற்றோர்கள்! ஊருணித் தண்ணீரில் கண்ட அதிர்ச்சி...!!!

இதையடுத்து, அயத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையோரமாக வாகனத்தை நிறுத்தியிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாருதி எர்டிகா கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிறுமி

கார் பலமாக மோதியதில் தானிகா சாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும், படுகாயமடைந்த குணசேகரன் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலைமைக்காவலர் கைது; பின்னர் ஜாமீன்

விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக்காவலர் விக்ரமன் என்பது தெரியவந்தது.

தனது குடும்பத்தினருடன் திருவாலங்காடு நோக்கிச் சென்றபோது விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விக்ரமனை கைது செய்த போலீசார், அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த 30 நாட்களுக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விக்ரமனை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

 

இதையும் படிங்க: இதவிட்டா வேற வழியில்லை! ஜெயிலுக்குப் போவதை தடுக்க கைதி செய்த அதிர்ச்சி செயல்.....அதை கண்டு நடுங்கிப்போன போலீஸ்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thiruvallur Accident #தானிகா சாரா #Chennai Tirupati Bypass #Head Constable Vikraman #Road accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story