×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் விவகாரத்தில் சகோதரர்கள் கொலை.. கல்லூரி மாணவர் கைது.. தேனியில் திடுக் சம்பவம்.! 

கள்ளக்காதல் விவகாரத்தில் சிறார்கள் கொலை செய்யப்பட்டனர். 

Advertisement

சிறார்களை கொலை செய்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். 

தம்பதிகள்: 

தேனி மாவட்டத்தில் உள்ள போடி, மேல சொக்கநாதபுரம், ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் சின்னத்தம்பி (வயது 34). இவரின் மனைவி செல்வி (வயது 34). தம்பதிகள் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு ஸ்ரீஹரிஷ் (வயது 11), சபரி (வயது 10) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: ஓரினசேர்கைக்கு உடன்பட மறுத்த 9 வயது சிறுவன் கழுத்து நெரித்துக்கொலை.. 17 வயது மாணவர் அதிர்ச்சி செயல்.. புதுக்கோட்டையில் துயரம்.!

மாணவர்கள்: 

சகோதரர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த நிலையில், இவர்கள் ஜூலை 24 ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த நிலையில், விளையாடச் சென்றவர்கள் மாயமாகினர். பின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், 3 கிமீ தொலைவில் இருக்கும் கிராமத்தின் தென்னந்தோப்பில், 100 அடி ஆழமுள்ள கிணற்றில் சடலமாக இருந்தனர். 

விசாரணை: 

இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வந்த நிலையில், இளைஞர் ஒருவர் சகோதரர்களை கிருஷ்ணன் கோயிலுக்கு அழைத்துச் சென்று கூழ் வாங்கிக்கொடுக்கும் சிசிடிவி காட்சி பதிவானது தெரியவந்தது. இதன்பேரில் சின்னத்தம்பியின் உறவினரான கேசவபாலாஜி (வயது 19) என்ற கல்லூரி மாணவரை கைது செய்தனர். 

அதிர்ச்சி தகவல்: 

அவரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி உண்மை அம்பலமானது. அதாவது, போடியில் செயல்படும் கல்லூரியில் பயின்று வரும் பாலாஜி, சிறுவர்களின் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதன்பேரில் அடிக்கடி வீட்டுக்கு வந்த சென்ற நிலையில், பாலாஜி வைத்திருந்த செல்போனை சிறார்கள் திருடி இருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து கேசவ பாலாஜி கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்.. 32 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? நிர்வாணமாக சடலம் மீட்பு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #illegal affair #Theni
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story