×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓரினசேர்கைக்கு உடன்பட மறுத்த 9 வயது சிறுவன் கழுத்து நெரித்துக்கொலை.. 17 வயது மாணவர் அதிர்ச்சி செயல்.. புதுக்கோட்டையில் துயரம்.!

Pudukkottai News: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை செய்யப்பட்டார்.

Advertisement

9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 17 வயதுடைய மாணவர் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவன்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, கருக்காகுறிச்சி, திருமுருகபட்டினம் பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரின் மகன் திருமேனிநாதன் (வயது 9). இவர் நெடுவாசல் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த ஜூன் 27ம் தேதி உள்ளூர் சிறார்களுடன் விளையாடச் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. 

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

வயலில் கொடூரம்:

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் சிறுவனை தேடிய நிலையில், குளத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையிலான காயங்களுடன் சிறுவன் உயிரிழந்து சடலமாக இருந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவர், சிறுவனை வயலுக்கு அழைத்துச் சென்று ஓரினசேர்கைக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

Representative: File Pic

கொலை & நாடகம்:

இந்த விஷயத்துக்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவிக்கவே, தப்பிக்க முயன்ற சிறுவனை வெளியே விஷயத்தை சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. பின் எதுவும் தெரியாமல் மாணவரை கிராம மக்களுடன் இணைந்து தேடியும் இருக்கிறார். விசாரணைக்குப்பின் 17 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சிறுவன் பெற்றோரின் கஷ்டத்தில் தினமும் பள்ளிக்குச் சென்று படித்து வந்துள்ளார். குடிசை வீட்டில் இருந்தாலும் ஒரே பிள்ளையென அன்பாக கவனித்து வந்த பெற்றோர், தங்களின் குழந்தையை இழந்து தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #pudukkottai #ஓரினசேர்க்கை #சிறுவன் கொலை #கறம்பக்குடி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story