கல்யாணம் ஆன 6 மாதத்தில் மனைவியை கொன்னுட்டு... கதவை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் கணவன் செய்த காரியம்.! தென்காசியில் நடந்த பயங்கரம்!!!
தென்காசியில் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் மறுநாள் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட தகராறு
தென்காசி மாவட்டம் மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த சக்தி வீர மணிகண்டன் (32) மற்றும் அன்னலட்சுமி (24) ஆகியோருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 26-ஆம் தேதி இரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சக்தி வீர மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளால் அன்னலட்சுமி மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்த கணவர்
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடிக்குச் சென்ற தூங்கிய சக்தி வீர மணிகண்டன், மறுநாள் காலை தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, மனைவியைக் கொலை செய்ததாக தெரிவித்து சரணடைந்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தென்காசி காவல்துறையினர், வீட்டிலிருந்து அன்னலட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சக்தி வீர மணிகண்டனை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.