இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்! ஆறு மாசமா லிவ்-இன் உறவு.... நாடுராத்திரியில் நடந்த விபரீதம்! வக்கீல் கொடுத்த ரகசியப் புகாரால் வெளியான பகீர் உண்மைகள்..!!!
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் லிவ்-இன் உறவில் வசித்து வந்த 20 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்ணீர் டேங்கர் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில் லிவ்-இன் உறவில் வசித்து வந்த 20 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தண்ணீர் டேங்கர் ஓட்டுநரான 27 வயது சரத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கான பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் நட்பில் தொடங்கிய உறவு
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்த அனுஷா மற்றும் சரத் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அந்த நட்பு பின்னர் காதலாக மாறிய நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து மல்லேஸ்வரத்தில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் ஏற்பட்ட தகராறு
தகவலின்படி, கடந்த சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரத், அனுஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
வழக்கறிஞர் தகவலால் வெளிச்சத்துக்கு வந்த கொலை
கொலைக்குப் பிறகு சரத் தனது வழக்கறிஞரை சந்தித்து நடந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் சேஷாத்ரிபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அழுகிய நிலையில் இருந்த அனுஷாவின் உடலை மீட்டனர்.
பின்னர் பெங்களூரு கொலை வழக்கு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது கர்நாடக போலீஸ் அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, கொலைக்கான முழு காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த பெரியப்பா மகனுடன் திருட்டுத்தனமாக உறவு! தகராறில் காதலனே கடைசியில் எமனாக மாறிய கொடூரம்.... சடலத்தை எரித்து பகீர் பின்னணி...!!!