×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்தரங்க விஷயத்தில் ஏற்பட்ட சண்டை.. மனைவி கேட்ட கேள்வி.. திருமணமான 5 மாதத்தில் புதுமணப்பெண் கொலை.! 

Newlywed Woman Killed: தென்காசியில் நடந்த கொடூரம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தனிமையின்போது கணவரின் ஒருசில செயல்கள் பிடிக்காத மனைவி, அதனை எடுத்துரைத்து கணவர் கேட்காத நிலையில், ஆத்திரத்தில் நடந்த சண்டை கொலையில் முடிந்துள்ளது. 

புதுமணத் தம்பதி: 

தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மா சாலை, சாஸ்தா கோயில் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரின் மகன் சக்தி வீரமணிகண்டன் (வயது 32). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் ஓர்க்ஸ்ஷாப் நடத்தி வருகிறார். ஆலங்குளம், ஐந்தாம்கட்டளை பகுதியில் வசித்து வந்தவர் அன்னலட்சுமி (வயது 24). தம்பதிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!

குடும்பத்தகராறு: 

திருமணம் நடந்து முடிந்த ஒருசில மாதங்களில் இருந்தே தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனிடையே, ஜூலை 27 ம் தேதி அதிகாலை சுமார் 1 மணியளவில் இருவருக்கும் இடையே நிலவி வாக்குவாதம் காரணமாக, வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டு இருந்த மனைவியை கொலை செய்த கணவர், மறுநாள் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

விசாரணை: 

தகவல் அறிந்து சென்ற தென்காசி காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது, திருமணமான பின்னர் தனிப்பட்ட உறவு விஷயங்களில் தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி இருக்கிறது. 

காரணம் என்ன?

சக்தியின் ஒருசில ஆசைகளை மனைவி நிறைவேற்ற மறுப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக எழுந்த பிரச்சனை பின்னாளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை உண்டாக்கி இருக்கிறது. ஒருகட்டத்தில் இருவரும் வாக்குவாதம் செய்யத்தொடங்கிய நிலையில், சம்பவத்தன்று அன்னலட்சுமி கணவரிடம் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சக்தி கொலை செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tenkasi #Crime news #Husband Wife #Couple Enjoy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story