வாழ வேண்டிய வயசுல இப்படி ஒரு முடிவா? கோவில் திருவிழா முடிந்த கையோடு வீட்டுக்கு வந்த தாய் இரண்டு குழந்தைகளுக்கும் செய்த கொடூரம்! மதுபோதை கணவனால் பறிபோன 3 உயிர்கள்... தென்காசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!
தென்காசி சிவகிரி அருகே குடும்பத் தகராறில் தாய் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்ததில் மூவரும் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குடும்பத் தகராறு காரணமாக தாய் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்ததில் மூவரும் உயிரிழந்தனர். வடக்குசத்திரம் கிராமத்தில் நடந்த இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் விழாவில் மீண்டும் ஏற்பட்ட தகராறு
வடக்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த காளிப்பாண்டி (32) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கும் மாரியம்மாளுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கபினேஸ்வரன் (5), ரபினேஸ்வரன் (4) என இரு மகன்கள் இருந்தனர். கபினேஸ்வரன் முதல் வகுப்பும், ரபினேஸ்வரன் அங்கன்வாடியிலும் படித்து வந்தனர்.
இதையும் படிங்க: வீடியோ காலில் அடிக்கடி பேசிய கணவன்..! மனைவிக்கு வந்த சந்தேகத்தால் அடுக்கடுக்காக வெளிவந்த அந்தரங்க அதிர்ச்சி! 1 இல்ல 2 இல்ல மொத்தம் 27...!!!
மது அருந்தும் பழக்கம் கொண்ட காளிப்பாண்டி, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிராமத்தில் நடைபெற்ற காளியம்மன் கோயில் புரட்டாசி கொடை விழாவின் முளைப்பாரி கும்மிப்பாட்டு நிகழ்ச்சியை மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த காளிப்பாண்டி, மீண்டும் அவருடன் தகராறு செய்ததாக தெரிகிறது.
வீட்டுக்குள் நடந்த துயர முடிவு
இதனால் மனமுடைந்த மாரியம்மாள் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். பின்னர் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு, பெட்ரோலை ஊற்றி குழந்தைகள் மீதும் தனது மீதும் தீ வைத்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர். கதவு பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தார். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய இரு குழந்தைகளையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி குழந்தைகளும் உயிரிழப்பு
நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் இரு சிறுவர்களும் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், கபினேஸ்வரன் மற்றும் ரபினேஸ்வரேஸ்வரன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சிவகிரி காவல் ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் தலைமையிலான போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து குடும்பத் தகராறு, தீக்குளிப்புக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரு சிறுவர்களும் உயிரிழந்தது வடக்குசத்திரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.