×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பகல் கொள்ளையாள இருந்துருக்கு.... ஹாட்டுக்கு 90.. பீருக்கு 40.. ஒயினுக்கு 20...! இதுவரை அமுக்கிய பணத்தை அப்படியே மீட்டெடுத்த அரசு..... டாஸ்மாக் கட்சி நிதிக்கு முதல்வர் விஜய் வைத்த ஆப்பு..!!!

டாஸ்மாக் கொள்முதல் நடைமுறைகளில் செய்யப்பட்ட புதிய மாற்றங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் அரசுக்கு நேரடியாக கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தமிழகத்தில் டாஸ்மாக் கொள்முதல் மற்றும் வருவாய் வசூல் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,200 கோடி வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

கொள்முதல் நடைமுறையில் மாற்றம்

தகவலின்படி, இதுவரை டாஸ்மாக் கொள்முதல் செயல்முறையில் ஹாட் மதுபான பெட்டிகளுக்கு ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என தனியாக தொகை வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த வசூல் 'கட்சி நிதி' என்ற பெயரில் மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடி வரை சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

அரசு கணக்கில் நேரடி வருவாய்

இதுவரை அரசு கணக்கில் பதிவு செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் இந்த தொகையை முழுமையாக அரசின் வருவாயாக மாற்றும் வகையில் கட்டண வசூல் முறையில் புதிய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வசூலாகும் தொகை நேரடியாக அரசு கணக்கில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய்?

கோட்டை வட்டாரத் தகவல்களின்படி, இந்த டாஸ்மாக் சீர்திருத்தத்தின் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு மொத்தம் ரூ.1,200 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் டாஸ்மாக் செயல்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

 

இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! மகளிர் உரிமைத் தொகையில் தகுதியற்றவர்களின் பட்டியல் நீக்கம்..... இனி ரூ.2500 யாருக்கெல்லாம் கிடைக்கும்.? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tasmac #தமிழ்நாடு அரசு #மது விற்பனை #Revenue Reform #Tasmac News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story