×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவர்களே ரெடியா? காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு! 

மாணவர்களே ரெடியா? காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு! 

Advertisement

தமிழ்நாட்டில் 2026–27ஆம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் இந்த காலகட்டத்தில் நடைபெறும். 10ஆம் வகுப்பு உள்ளிட்ட பொதுத்தேர்வு வகுப்புகளுக்கும் செப்டம்பர் 17 முதல் 25ஆம் தேதி வரையிலான காலக்கெடுவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: BREAKING: குஷியோ குஷி! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...!!,

மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளையும் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள்கள் தனியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. 

அதேபோல், அக்டோபர் 5 பள்ளிகள் மீண்டும் திறப்பு என பள்ளி நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், காலாண்டுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் தேர்வுக்கான தயாரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள்..! காலையில் சடலமாக கிடந்த மூதாட்டி.... பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#quarterly exam #Govt school #Quarterly exam schedule #Exam schedule
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story