BREAKING: குஷியோ குஷி! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...!!,
தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 17 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும். இதையடுத்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுகள் முடிந்ததும், மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
செப்டம்பர் 17 முதல் காலாண்டு தேர்வு
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகின்றன. தொடர்ந்து நடைபெறும் தேர்வுகள் செப்டம்பர் 25-ம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிஷ்டகார பாட்டி... முதல்வர் விஜய் அளித்த அன்பு பரிசு! சின்னக்காவூர் திடீர் விசிட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!!!
செப்டம்பர் 26 முதல் 9 நாட்கள் விடுமுறை
தேர்வுகள் நிறைவடைந்த மறுநாளான செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. இதனால் தேர்வுகளுக்குப் பிறகு மாணவர்கள் தொடர்ந்து 9 நாட்கள் ஓய்வு எடுக்க வாய்ப்பு கிடைக்கிறது.
சிறப்பு வகுப்புகள் நடத்த தடை
விடுமுறை காலத்தில் மாணவர்களின் ஓய்வுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கூடுதல் பாடங்கள் அல்லது வகுப்புகளையும் நடத்த வேண்டாம் என பள்ளிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: இதுதான் காரணம்... மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 திடீர் நிறுத்தம்? சிக்கலை உடனே சரிசெய்யுங்க...!!!