×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிஷ்டகார பாட்டி... முதல்வர் விஜய் அளித்த அன்பு பரிசு! சின்னக்காவூர் திடீர் விசிட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!!!

மேட்டூர் அணை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சேலம் திரும்பிய முதலமைச்சர் விஜய், சின்னக்காவூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விவசாய குடும்பத்தினரையும் பெண் தொழிலாளர்களையும் சந்தித்தார்.

Advertisement

மேட்டூர் அணையின் திறப்பு விழாவை முடித்துவிட்டு சேலம் நோக்கி சென்ற முதலமைச்சர் விஜய், சின்னக்காவூர் கிராமத்தில் திடீரென வாகனத்தை நிறுத்தினார். முன்னறிவிப்பு இல்லாமல் அவர் கிராமத்துக்குள் வந்ததால், பொதுமக்கள் உற்சாகத்துடன் திரண்டு வரவேற்றனர். தொடர்ந்து, விவசாயக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குச் சென்ற அவர், அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து கேட்டறிந்தார்.

விவசாய குடும்பத்தினரிடம் நேரில் கேட்டறிந்த விஜய்

சின்னக்காவூரில் உள்ள எளிய விவசாய குடும்பத்தின் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர், குடும்பத்தினருக்கு பாரம்பரிய பட்டு வேட்டி மற்றும் பட்டுப் புடவைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து பேசினார். விவசாயப் பணிகள் எப்படி நடக்கின்றன, வருமானம் எப்படி உள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: சில நிமிட நிகழ்ச்சிகாக பல கோடி செலவா? மேட்டூரில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! கொதிக்கும் தமிழக மக்கள்...!!!

வீட்டின் பின்புற கொல்லைப்புறத்தில் வாழை சாகுபடி செய்வதே தங்களின் முக்கிய வாழ்வாதாரம் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, கூடுதல் அரசு உதவி, வேளாண் கருவிகள் அல்லது புதிய திட்டங்களின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்து குறிப்பெடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டிக்கு கூலிங் கிளாஸ் அணிவித்த முதலமைச்சர்

விடைபெறும் நேரத்தில் அந்த வீட்டின் மூத்த பாட்டி, முதலமைச்சரின் கையைப் பிடித்தபடி வாசல் வரை வந்தார். அப்போது திடீரென தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை கழற்றிய முதலமைச்சர், அதை அந்த மூதாட்டிக்கு அணிவித்தார். பின்னர் அவரது கையைப் பிடித்துக்கொண்டு அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி இருவரும் கையசைத்தனர்.

முதலமைச்சரின் இந்த அணுகுமுறையை பார்த்த கிராம மக்கள் கைதட்டி உற்சாகம் தெரிவித்தனர். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், அந்த வீட்டுக்கு வந்த இளைஞர்களும் சிறுவர்களும் பாட்டி அணிந்திருந்த கூலிங் கிளாஸ் மூலம் செல்ஃபி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

விளைநிலத்தில் பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்

சின்னக்காவூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் விமான நிலையம் நோக்கிச் சென்ற முதலமைச்சர், வழியில் விளைநிலங்களில் பெண் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதை கவனித்தார். உடனே வாகனத்தை நிறுத்திய அவர், நேரடியாக வயலுக்குள் சென்று அவர்களுடன் பேசினார்.

அன்றாட விவசாயப் பணிகளில் சந்திக்கும் சிரமங்கள், கூலி நிலவரம், பயிர்களை பாதுகாப்பதில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து பெண் தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். கிராமப்புற மக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்த முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட இந்த தொடர் களச் சந்திப்புகள் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: BREAKING : கடன் தள்ளுபடி.... தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#முதலமைச்சர் விஜய் #சின்னக்காவூர் #மேட்டூர் அணை #விவசாயிகள் #Chinnakavur Visit
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story