இதெல்லாம் யாருகிட்ட.... நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்! CM விஜய் போட்ட ரகசிய உத்தரவால் ஆடிப்போன அதிகாரிகள்.!!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், டிஜிபி தலைமையில் மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் கமிஷனர்களுடன் தினசரி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுடன் தினசரி உயர்நிலை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் கூட்டங்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஸ்வர் தயாள் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! ஊருக்குள் அரிவாளுடன் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய கும்பல்..! பகீர் வீடியோ..!!!
சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம்
புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சில பகுதிகளில் சமீபத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் குறித்து பல்வேறு தரப்பிலும் கவலைகள் எழுந்தன. இதையடுத்து காவல்துறையினர் தங்களது பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தினமும் 2 மணி நேர ஆலோசனை
தகவலின்படி, கடந்த நான்கு நாட்களாக Video Conference மூலம் தினமும் சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மாநிலத்தின் 38 மாவட்ட எஸ்பிக்கள், 9 மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் 4 மண்டல ஐஜிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய வழக்குகளின் நிலை குறித்து டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் விரிவாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வதந்திகளைத் தடுக்க உத்தரவு
காவல்துறையின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய சம்பவங்கள் குறித்த உண்மையான தகவல்களை உடனுக்குடன் வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வதந்திகள் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என்றும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொதுமக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: யாருகிட்ட உங்க ஆட்டம்லா.... டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு...!!!