×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING: யாருகிட்ட உங்க ஆட்டம்லா.... டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு...!!!

கள்ளச்சந்தை மது விற்பனையை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் விஜய் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் மஃப்டி போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுகிறது.

Advertisement

தமிழகத்தில் கள்ளச்சந்தை மது விற்பனையை கட்டுப்படுத்த முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், சட்டவிரோத மது விற்பனையை முற்றிலுமாக தடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிய போலீசார் சாதாரண உடையில் ரோந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அப்படி போடு.... அடி தூள்! 21 வயசுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கிடையாது! முதல்வர் விஜய்யின் அடுத்தக்கட்ட அதிரடி உத்தரவு..!!!

மஃப்டி போலீசாருக்கு சிறப்பு உத்தரவு

கள்ளச் சந்தை மூலம் மது விற்பனை செய்யப்படுவதாக வரும் தகவல்களை உடனுக்குடன் சரிபார்க்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மஃப்டி போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல், புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட உள்ளது. சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்குப் பிறகு பார்களுக்கு கட்டுப்பாடு

மேலும், இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கூடங்களில் யாரும் தங்க அனுமதிக்கக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேரம் முடிந்தவுடன் வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார் மூடப்பட்டதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள் மூலம் கள்ளச்சந்தை மது விற்பனையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#CM Vijay #கள்ளச்சந்தை மது #Tamil Nadu Police #Bar Closing #மது கண்காணிப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story