×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்படி போடு.... அடி தூள்! 21 வயசுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கிடையாது! முதல்வர் விஜய்யின் அடுத்தக்கட்ட அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதையடுத்து டாஸ்மாக் நிர்வாகத்தில் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 700 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது மது விற்பனை தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு எந்த சூழலிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என பணியாளர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் சரிபார்க்க உத்தரவு

தகவலின்படி, வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களை சரிபார்த்த பின்னரே மதுபானம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் ‘இருட்டு அறை’ பகுதிகளில் இருப்பவர்களுக்கு மது வழங்கக் கூடாது என்றும் தனிப்பட்ட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: குடிமகன்களுக்கு ஷாக் நியூஷ்! தமிழகத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..... ஹோட்டலில் பார்களும் மூடப்படும்!!!

சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

இளைஞர்கள் மற்றும் சிறார்கள் டாஸ்மாக் மூலம் எளிதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: மொத்த லிஸ்ட்டும் ரெடி.... தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு! எந்தெந்த இடங்களில் தெரியுமா?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tasmac #தமிழ்நாடு அரசு #மது விற்பனை #Vijay Government #21 வயது கட்டுப்பாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story