×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING : மகளிர் உரிமைத் தொகை திடீர் நிறுத்தம்! சற்றுமுன்... தத்தளிக்கும் தமிழக பெண்கள்!!!

செப்டம்பர் மாத மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட நிலையில், பலருக்கு எந்த முன்அறிவிப்பும் இன்றி தொகை நிறுத்தப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

செப்டம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழக்கமான தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய ஆட்சி அமைந்தது முதல் பலருக்கு தொகை வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. எந்தவித முன்அறிவிப்பும் இன்றி மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்து வருகின்றனர்.

முன்கூட்டியே வந்த தொகை;

செப்டம்பர் மாத தவணை முன்கூட்டியே செலுத்தப்பட்டாலும், வழக்கமாக தொகை பெற்று வந்த சிலரின் கணக்குகளில் இந்த முறை பணம் வரவு வைக்கப்படவில்லை. தாங்கள் தகுதியானவர்களாக இருந்தும் நிதி கிடைக்கவில்லை என பல பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பண்டிகைக்கு முன்பே வங்கி கணக்கில் வரவு! மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வந்துடுச்சு... உடனே செக் பண்ணுங்க...!!!

தகுதியற்றவர்களை நீக்கும் நடவடிக்கையா?

தகுதியற்ற பயனாளிகளை நீக்குவதுடன், திட்டத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருடைய தொகை ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்து போதிய விளக்கம் அல்லது வழிகாட்டுதல் இல்லாததால் குழப்பம் நீடிக்கிறது. குறிப்பாக, இந்த உதவித்தொகையை நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொகை வந்ததா என்பதை எப்படி சரிபார்ப்பது?

இந்த மாத தவணை தங்களுக்கு கிடைத்துள்ளதா, அல்லது நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை பயனாளிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தங்களது விண்ணப்பம் மற்றும் தொகை தொடர்பான நிலையை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் பணம் வராததற்கான காரணம் குறித்து தெளிவு பெற முடியும்.

 

இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி.... முதல்வர் விஜய்யின் அடுத்த சர்ப்ரைஸ்! எதிர்பார்பில் அரசியல் வட்டாரம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மகளிர் உரிமைத் தொகை #tamil nadu #பெண்கள் நிதியுதவி #Kalaignar Magalir Urimai Thogai #e-Sevai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story