பண்டிகைக்கு முன்பே வங்கி கணக்கில் வரவு! மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வந்துடுச்சு... உடனே செக் பண்ணுங்க...!!!
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செப்டம்பர் மாத மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 முன்கூட்டியே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை செயல்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000, வழக்கமான தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாகவே தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வரும் விநாயகர் சதுர்த்தி மற்றும் அதையொட்டிய தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, இந்த முறை முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி.... முதல்வர் விஜய்யின் அடுத்த சர்ப்ரைஸ்! எதிர்பார்பில் அரசியல் வட்டாரம்!!!
பண்டிகைக்கு முன்பே கணக்கில் வரவு
பண்டிகை காலத்தில் குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு உதவும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால், வழக்கமான தேதிக்காக காத்திருக்காமல் பெண்களின் கணக்கில் பணம் கிடைத்துள்ளது.
வங்கிக் கணக்கில் பணம் வந்ததா? இப்படிச் சரிபார்க்கலாம்
அரசு தரப்பில் தொகை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை பெண்கள் வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி அல்லது இணைய வங்கி சேவை மூலமாகவும் கணக்கு இருப்பை சரிபார்க்க முடியும்.
ரூ.1,000 உரிமைத் தொகை முன்கூட்டியே கிடைத்திருப்பது பண்டிகை செலவுகளுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த முன்கூட்டிய நடவடிக்கை பெண்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... சொன்னதை செய்யும் தவெக அரசு! ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு... வெளியான முக்கிய அறிவிப்பு..!!!